சுங்கக் கட்டணம் உயர்வால் பொதுமக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாவார்கள்: ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்
சென்னை: சுங்க கட்டண உயர்வால் மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாவார்கள் என்பதால் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜ அரசின் நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வை அறிவித்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வாகனம் சுங்கச் சாவடியை கடந்து எவ்வளவு தொலைவு பயணம் செய்கிறது என்ற வரையறை இல்லாமல், ஒரு சுங்கச்சாவடியைக் கடந்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வணிகம் சார்ந்த மற்றும் வணிகம் சாராத பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு தேவையில்லாமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை... விரிவாக படிக்க >>