Bharat Bandh | 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 20 லட்சம் காசோலைகள்..! - வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்கால் முடக்கம்
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலைகள் பரிவர்த்தனை முடங்கியது.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. பொது வேலைநிறுத்தத்தையொட்டி கர்நாடகா மாநிலம் கல்புரகியில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் மற்றும் இடதுசாரி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
Also Read: Anbil Mahesh | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment