Posts

Showing posts with the label #10 | #Year | #Crushed | #Father

தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி தந்தை கண்முன்னே 10 வயது சிறுவன் உடல் நசுங்கி உயிரிழப்பு..!369350897

Image
தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி தந்தை கண்முன்னே 10 வயது சிறுவன் உடல் நசுங்கி உயிரிழப்பு..! புதுச்சேரியில் இருசக்கர வாகனம் சாலையில் சரிந்து விழுந்ததில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தந்தை கண்முன்னே 10 வயது சிறுவன் உயிரிழந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது. புதுச்சேரி பாவணன் நகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம், அவரது மகன் கிஷ்வந்தை வழக்கம் போல் பள்ளிக்கு பைக்கில் அழைத்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பவழம் சாவடி அருகே எதிர்திசையில் திடீரென ஒரு பைக் வந்ததால், பன்னீர்செல்வம் தனது பைக்கின் வேகத்தை குறைத்துள்ளார். அதில் நிலைத்தடுமாறி வாகனத்துடன் இருவரும் கீழே விழுந்த நிலையில், அவ்வழியாக வந்த தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுவன் கிஷ்வந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.