நேரடி 2ம் ஆண்டு பிஇ படிப்பில் சேர்க்கை தொடங்கியது!!1007192160
நேரடி 2ம் ஆண்டு பிஇ படிப்பில் சேர்க்கை தொடங்கியது!! அரசு மற்றும் அரசு உதவி பெறும் அண்ணா பல்கலைக் கழகதுறை, உறுப்புக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு பிஇ படிப்பில் சேர விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் www.tnlea.com, www.accet.co.in, www.accetedu.in ஆகிய இணைய தளங்கள் மூலம் இன்று முதல் ஜூலை 23ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக் கட்டணமாக ரூ.300 டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.