Posts

Showing posts with the label #Private | #School | #Heated | #Chennai

Private school heated up for disabled student .. Parents complained to the police as the girl\'s body was injured in several places.!

Image
மாற்றுத்திறனாளி மாணவிக்கு சூடு வைத்த தனியார் பள்ளி.. சிறுமியின் உடம்பில் பல இடங்களில் காயம் இருந்ததால் பெற்றோர் போலீசில் புகார்.! சென்னை பெரம்பூரில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்ததாக தனியார் பள்ளி நிர்வாகம் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. கல்கி ரங்கநாதன் மாற்றுத்திறனாளி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் 6 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை அவரது தாத்தா பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுமியின் கை மற்றும் காலில் சூடு வைத்தது போன்ற காயங்கள் இருந்ததாக அவரது தாத்தா சிறுமியின் தாயாரிடம் கூறியுள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் பள்ளியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.