JEE 2022 மெயின் தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!1876164172
JEE 2022 மெயின் தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு! JEE 2022 மெயின் தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு! உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் JEE மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று (ஜூலை 11) வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம். தேர்வு முடிவுகள் இந்தியா முழுவதும் உள்ள NIT, IIT உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் (BE), B.Tech உள்ளிட்ட படிப்புகளை மேற்கொள்ள தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் 2022-23ம் கல்வியாண்டில் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்கான JEE தேர்வானது சமீபத்தில் நடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை (NTA) 2022ம் ஆண்டுக்கான கூட்டு நுழைவுத்தேர்வு (JEE) முதன்மை முடிவுகளை இன்று (ஜூலை 11) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இப்போது விண்ணப்பதாரர்கள் jeemain.nta.nic.in, nta.ac.in அல்லது ntaresults.nic.in என்ற இணையதளங்களில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு JEE முதன்மை தேர்வு முடிவுகள...