3 ஆண்டுகள்.. 3 லட்சம் மரங்கள்..! -இளைஞர் ஏற்படுத்திய புரட்சி1191597303
3 ஆண்டுகள்.. 3 லட்சம் மரங்கள்..! -இளைஞர் ஏற்படுத்திய புரட்சி பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர், முதலாம் ஆண்டு படித்தபோது தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்றிருக்கிறார். அப்போது காடு வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்திருக்கிறார். அவரது குடும்ப சூழலும் மரக்கன்று வளர்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. அவர் வசித்த பகுதியில் நிலவிய வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறார். குடிநீர் தேடி நீண்ட தூரம் அலைந்திருக்கிறார். அந்த நிகழ்வு சுற்றுச்சூழல் பிரச்சினைகளை பற்றி படிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் தூண்டி இருக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணி புரிய தொடங்கி இருக்கிறார். ''தண்ணீர் பற்றாக்குறை, பருவ கால நிலை மாற்றம் போன்ற கடுமையான சுற்றுச்சுழல் பாதிப்புகளுக்கு மரங்களை வெட்டுவதுதான் முதன்மை காரணம். அதனை உணர்ந்துதான் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தேன். அதுவே என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்துவிட்டது'' என்கிறார். விஷால் ஆரம்பத்தில் பி.டெக் படிப்பில் சேர ஆர்வம...