46 பேர் உயிரிழப்புக்கு அமெரிக்க அதிபர்தான் காரணம் - டெக்சாஸ் ஆளுநர் குற்றச்சாட்டு698223693
46 பேர் உயிரிழப்புக்கு அமெரிக்க அதிபர்தான் காரணம் - டெக்சாஸ் ஆளுநர் குற்றச்சாட்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆள் அரவமற்ற இடத்தில் கண்டெய்னர் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதை திறந்து பார்த்தபோது 50-க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் கண்டெய்னரில் இருந்தவர்களை பரிசோதித்ததில் 46 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும் மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 16 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்துவருகிறது. இந்த கண்டெய்னர் லாரி மெக்சிகோவில் இருந்து வந்ததும் லாரிக்குள் இருந்த அனைவரும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் நோக்கத்தோடு வந்த அகதிகள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடுமையான வெப்பம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் லாரி கண்டெய்னரில் 46 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ல...