டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் சந்திப்பு!
டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் சந்திப்பு! புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை முதல்வர் இன்று சந்திக்கிறார். நாடாளுமன்ற இரு அவை களிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, திமுகவுக்கு 2013-ம் ஆண்டு, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பாஜக அலுவலகம் அருகில் நிலம் வழங்கப்பட்டது. இந்த இடத்தில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதை ஏப்.2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு 9 மணிக்கு டெல்லிபுறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்த மனுவை அளிக்கிறார். நீட...