JEE 2022 மெயின் தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!1876164172


JEE 2022 மெயின் தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!


JEE 2022 மெயின் தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!

உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் JEE மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று (ஜூலை 11) வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

தேர்வு முடிவுகள்

இந்தியா முழுவதும் உள்ள NIT, IIT உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் (BE), B.Tech உள்ளிட்ட படிப்புகளை மேற்கொள்ள தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் 2022-23ம் கல்வியாண்டில் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்கான JEE தேர்வானது சமீபத்தில் நடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை (NTA) 2022ம் ஆண்டுக்கான கூட்டு நுழைவுத்தேர்வு (JEE) முதன்மை முடிவுகளை இன்று (ஜூலை 11) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இப்போது விண்ணப்பதாரர்கள் jeemain.nta.nic.in, nta.ac.in அல்லது ntaresults.nic.in என்ற இணையதளங்களில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு JEE முதன்மை தேர்வு முடிவுகளை சரிபார்க்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் JoSAA கவுன்சிலிங்கில் பங்கேற்று NIT, IIT மற்றும் பிற அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.

குறிப்பாக, NTA JEE முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினருக்கு 75 சதவீதமும், SC/SC/PWD பிரிவினருக்கு 65 சதவீதமும் குறைந்தபட்ச மதிப்பெண்களாக அனுமதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தேசிய தேர்வு முகமை (NTA) JEE முதன்மை தேர்வுக்கான 2வது அமர்வை ஜூலை 21 முதல் ஜூலை 30 வரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இப்போது JEE முதன்மை தேர்வு அமர்வு 1 தொடர்பான முடிவை சரிபார்க்கும் வழிமுறைகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

 

  • அதன்படி, விண்ணப்பதாரர்கள் முதலில் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை திறக்கவும்.
  • அதில் ‘JEE Main 2022 Session 1 Result download’ என்ற அறிவிப்பு இணைப்பை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து ரோல் எண், பிறந்த தேதி, கேப்ட்சா குறியீடு மற்றும் பிற விவரங்களை உள்ளிடவும்.
  • இப்போது JEE முதன்மை தேர்வு முடிவுகள் தோன்றும்.

Comments

Popular posts from this blog