மகளிர் உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியா
வெலிங்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா 7வது முறையாக தகுதி பெற்றது.
பேசின் ரிசர்வ் மைதானத்தில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியதால் ஓவர்களின் எண்ணிக்கை 45 ஆக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச, ஆஸி. தொடக்க வீராங்கனைகள் ரேச்சல் ஹெய்ன்ஸ் - அலிஸா ஹீலி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 216 ரன் சேர்த்தனர். அலிஸா 129 ரன் (107 பந்து, 17 பவுண்டரி, 1 சிக்சர்), ரேச்சல் 85 ரன் (100 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஆஷ்லி கார்ட்னர் 12 ரன்னில் வெளியேறினர்.
ஆஸி. 45 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது. கேப்டன் லான்னிங் 26*, பெத் மூனி 43* ரன்னுடன் கடைசி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment