ஹோட்டல் ரூமில் நடிகையும், மாடல் அழகி தூக்கிட்டு தற்கொலை!!1723170891
ஹோட்டல் ரூமில் நடிகையும், மாடல் அழகி தூக்கிட்டு தற்கொலை!!
ஹோட்டல் ரூமில் நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோசன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மும்பையில் வசித்து வந்தவர் அகன்ஷா மோகன்... 30 வயதாகிறது.. மாடலிங் துறையில் மிகவும் பிரபலமானவர்.. நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளார்.
சியா என்ற படத்தில், ஷிபெய்ல் என்ற கேரக்டரில் இவர் நடித்திருக்கிறார்.. இந்த படம் கடந்த 16-ம் தேதி ரிலீஸ் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது.
கீ சாவி
சினிமா, மாடலிங் என வாய்ப்புகள் வர தொடங்கியுள்ள நிலையில், இவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. அந்தேரியில் ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளார் அகன்ஷா மோகன்.. ரூமில் இருந்து நீண்ட நேரமாக இவர் வெளியே வராமல் இருந்துள்ளார்.. அதனால் கதவை தட்டினாலும், திறக்கப்படாததால், ஓட்டல் ஊழியர்கள் சந்தேகமடைந்து, உடனடியாக போலீசுக்கு சொல்லி உள்ளனர்.. போலீசாரும் விரைந்து வந்து உள்ளே ரூமுக்குள் நுழைந்து பார்த்துள்ளனர்.. அப்போது ஃபேனில் தூக்கிட்டு பிணமாக நடிகை தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர்.
மன்னிச்சிடுங்களேன்
இதனை தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.. பிறகு அந்த ரூமில் இருந்து ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், 'என்னை மன்னித்துவிடுங்கள். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் சந்தோஷமாக இல்லை. எனக்கு அமைதிதேவைப்படுகிறது,.. யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஎன்று உருக்கமாக எழுதப்பட்டிருந்தது... அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் நடிகையின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாஸ்டர் கீ
மும்பையில் வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ஹோட்டலில் ரூம் புக் செய்து தங்கியிருக்கிறார்... வந்ததுமே சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.. காலையில் ஹோட்டல் ஊழியர்கள் மாடல் அழகி தங்கியிருந்த ரூம் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை... பிறகுதான் போலீஸ் வந்துள்ளனர்.. போலீஸார் முன்னிலையிலேயே ஹோட்டல் ஊழியர்கள் தங்களிடமிருந்த மாஸ்டர் சாவி மூலம் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்..
நெருக்கடிகள்
போலீஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில், அகான்ஷா மோகன் கடந்த சில மாதங்களாகவே வேலையில்லாமல் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.. இதனால் நிதி நெருக்கடிக்கும் ஆளாகி வந்ததால், அதனாலேயே இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.. ஆனால், தற்போதுதான் ஒரு படம் வெளியாகி உள்ள நிலையில், அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும்முன்னேயே, தற்கொலையை நடிகை தேர்ந்தெடுத்ததும், சந்தேகத்திற்குரியதாகவே பார்க்கப்படுகிறது.. இது தொடர்பாக வர்சோவா போலீஸார் விபத்து மரணம் என்று வழக்கு பதிவுசெய்து, விசாரித்து வருகின்றனர்.
பிரபல நடிகை
கொரோனாவுக்கு பிறகு இப்படியான தற்கொலைகள் பாலிவுட்டில் அதிகரித்து வருகிறது.. கடந்த 3 வருடங்களில், கொரோனா பிரச்சனையை காட்டி, எத்தனையோ பாலிவுட் பிரபலங்கள், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.. தற்போது, கொரோனாவில் இருந்து மீண்டு வந்தும், பல நடிகர், நடிகைகள் போதிய பட வாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.. அந்தவகையில், இந்த மரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அத்துடன், இளம் நடிகைகளின் தற்கொலைகளும் சமீபகாலமாகவே அதிகரித்து வருவது, கவலையை ஏற்படுத்தி வருகிறது.
Comments
Post a Comment