சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு முற்றுப்புள்ளி? அடுத்த சொத்துக்கள் முடக்கம் 1337639462


சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு முற்றுப்புள்ளி? அடுத்த சொத்துக்கள் முடக்கம்


சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் கடந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு இரண்டு அணிகளாக பிரிந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு செய்த பல கோடி ரூபாய் பணத்தை தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்ததால் இந்த சோதனை நடைபெற்றது.

அதில், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் சோதனையில், விற்பனையை குறைத்து அக்கவுண்ட் ஆவணங்கள் கையாண்டு வந்திருப்பது தெரிய வந்தது. அதன்படி, சரவணா ஸ்டோர் தொடர்பான இடங்களில் கடந்த 7 ஆண்டுகளாக விற்பனை செய்த கணக்கில் 1,000 கோடி ரூபாயை மறைத்து ஆவணம் செய்தது தெரிய வந்தது.

மேலும், ஜவுளிப் பிரிவு மற்றும் நகைப் பிரிவில் கடந்த சில ஆண்டுகளில் 150 கோடிக்கு கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டது வரவு வைக்காததும் தெரியவதுள்ளது. மேலும், 80 கோடிக்கு போலி பில் போட்டதும் அம்பலமானது.

இந்த நிலையில், இந்தியன் வங்கியில் கடன் பெற்று பணமோசடியில் ஈடுபட்டதான புகாரில் சென்னை சரவணா ஸ்டோர்ஸ் (கோல்ட் பேலஸ்) நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.234.75 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக வர்த்தகத்துறையில் முக்கிய நிறுவனமாக உள்ள சரவணா தொடர்ச்சியாக வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி விவகாரத்தில் சிக்குவது நிறுவனத்துக்கும் மட்டுமின்றி நுகர்வோரையும் அதிச்சியடைய வைத்துள்ளது.

Comments

Popular posts from this blog

Slow Cooker Buffalo Chicken Chili