வனிதா விஜயகுமார் கர்ப்பமா? வாயடைத்து போன ரசிகர்கள்!
வனிதா விஜயகுமார் கர்ப்பமா? வாயடைத்து போன ரசிகர்கள்!
சர்ச்சை நாயகியாக வலம் வரும் வனிதா இப்போது ரொம்ப பிஸி. வெள்ளித்திரையில் லீட் ரோலிலும், துணை நடிகை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் வாரிசான இவர் இதுவரை ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். விஜய்யின் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக தனது கெரியரை தொடங்கியவர் ஒருசில படங்களில் நடித்து பின்பு திருமண வாழ்க்கையில் பிஸியானார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து அவருக்கும் முதல் கணவருக்கு விவாகரத்து ஆகியது.
முடிவுக்கு வரும் பிரபல சீரியல்? வெளியான தகவலால் சோகத்தில் ரசிகர்கள்!
பின்பு இரண்டாவது தொழிலபதிபர் ஒருவரை வனிதா திருமணம் செய்தார். ஆனால் அவருடனும் விவாகரத்து நடக்க பின்பு பிரபல டான்ஸ் மாஸ்டர் ஒருவரை வனிதா காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அவருடன் சேர்ந்து வனிதா நடித்து இருக்கிறார். இப்படி இருக்கையில் வனிதாவுக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் 3வது திருமணம் நடைப்பெற்றது. ஆனால் அதுவும் சில மாதங்கள் வரை மட்டுமே நீடித்தது. இப்போது பீட்டர் பாலும் வனிதாவும் பிரிந்து விட்டனர். இப்படி வனிதாவுக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை.
ஆனால் சினிமா கெரியர் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தவர் அடுத்து குக் வித் கோமாளி, பிக் பாஸ் அல்டிமேட் என கலக்கினார். அதன் மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர தனியாக ஃபேஷன் பொடிக் நடத்தி வருகிறார். அதே போல் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram
டெலிகாஸ்ட் ஆன கொஞ்ச நாளிலே ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலுக்கு இப்படியொரு சோதனையா!
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வனிதா கர்ப்பமாக இருப்பது போல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதுக் குறித்து ரசிகர்களுக்கு எந்த விவரமும் தெரியவில்லை. இந்நிலையில் இந்த புகைப்படத்திற்கு வனிதாவே விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, வனிதா ’வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் இவர் நிறைமாத கர்ப்பிணியாக பல்லவி என்ற ரோலில் நடிக்கிறார்.இதை அவரே பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகின என்பது இப்போது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment