‘கும்பளங்கி நைட்ஸ்’ நடிகை அம்பிகா ராவ் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்


‘கும்பளங்கி நைட்ஸ்’ நடிகை அம்பிகா ராவ் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்


மலையாள நடிகை அம்பிகா ராவ் மாரடைப்பால் காலமானார்.

மலையாள நடிகையும், உதவி இயக்குனருமான அம்பிகா ராவ், ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 58. அறிக்கையின்படி, எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரவு 10.30 மணியளவில் அம்பிகா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

அம்பிகா ராவ், பாலச்சந்திர மேனன் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளியான ‘கிருஷ்ண கோபாலகிருஷ்ணா’ படத்தின் மூலம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்தார். சுமார் இரண்டு தசாப்தங்களாக பொழுதுபோக்கு துறையில் பணிபுரிந்து வந்த இவர், மம்முட்டி நடித்த ‘ராஜமாணிக்யம்’, ‘தொம்மனும் மக்களும்’ மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘வெள்ளினக்ஷத்திரம்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். திலீப் நடித்த பிளாக்பஸ்டர் படமான ‘மீஷா மாதவன்’, ‘சால்ட் அண்ட் பெப்பர்’, சமீபத்தில் வெளியான ‘அனுராகா காரிக்கின் வெல்லம்’, ‘தமாஷா’ மற்றும் ‘வெல்லம்’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

பாவம் கணேசன் நவீன் மனைவி கிருஷ்ணகுமாரி வளைகாப்பு - வைரலாகும் படங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மது சி நாராயணன் இயக்கிய ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் அம்பிகா ராவ் புகழ் பெற்றார். 2019-ல் வெளியான, ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் அம்பிகா ராவ், பேபி மற்றும் சிமியின் தாயாக நடித்திருந்தார். அம்பிகா ராவுக்கு ராகுல் மற்றும் சோகன் என இரு மகன்கள் இருக்கின்றனர்.

அவரின் மறைவுக்கு மலையாள திரையுலகினர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog