\"கட்சியை அழித்தவனே\" - ஜெயக்குமார் கார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல்!2035958917
\"கட்சியை அழித்தவனே\" - ஜெயக்குமார் கார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல்!
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நிச்சயம் நடைபெறும். ஓபிஎஸ் வருவதால் ஆலோசனை கூட்டத்தை விட்டு வெளியே வரவில்லை .
பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.ஒற்றை தலைமை கோரிக்கை செயல்வடிவம் பெற லாம் பெறாமலும் போகலாம்" என்றார் . உள்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசிய ஜெயக்குமார் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை செல்வராஜ் பேட்டி அளித்துள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு, “தெருவில் போற கண்டவனுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என பதிலளித்தார்.
இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்சியை அழித்தவனே என கூச்சலிட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயக்குமார் காரின் மீது தாக்குதல் நடத்தினர். பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஆலோசனையை முடித்துவிட்டு ஜெயக்குமார் புறப்பட்டபோது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
Comments
Post a Comment