உற்சாகத்தில் ரயில் பயணிகள்1945343958


உற்சாகத்தில் ரயில் பயணிகள்


நாளை முதல் கொரோனா பெருந்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட 34 ரயில்களை மீண்டும் இயக்க இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளதற்கு ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதலே கொரோனா தொற்றின் தாக்கம் ஏற்பட தொடங்கியது. கொரோனா காரணமாக நாட்டில் ரயில், விமான சேவைகள் சுமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் 34 ரயில்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

திருச்செந்தூர் - திருநெல்வேலி (06405/06409),

மதுரை - செங்கோட்டை (06663/06664), திருநெல்வேலி - செங்கோட்டை (06681/06658), செங்கோட்டை - திருநெல்வேலி (06684/06687) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. திருச்சி - ஈரோடு (06809/06810), திருச்சி - ஈரோடு (06611/06612) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் ஜூலை 9-ம் தேதியில் இருந்தும், அரக்கோணம் - கடப்பா (06401/06402), கோவை - சேலம் (06802/06803), திருச்சி - கரூர்(06881/06882), சேலம் - கரூர் (06821/06822) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் ஜூலை 27-ம் தேதியில் இருந்தும் மீண்டும் இயக்கப்படுகின்றன. தஞ்சாவூர் - திருச்சி (06683), திருச்சி - காரைக்கால் (06880), காரைக்கால் - தஞ்சாவூர்(06457) முன்பதிவில்லா ரயில்கள் ஜூலை 23-ம் தேதி, விழுப்புரம் - மயிலாடுதுறை (06991/06990) முன்பதிவில்லா ரயில் ஜூலை 11-ம்தேதி, தஞ்சாவூர் - காரைக்கால் (06832) ரயில் ஜூலை 24-ம் தேதி உட்பட தெற்கு ரயில்வேயில் 34 முன்பதிவில்லா ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Slow Cooker Buffalo Chicken Chili