Samson: ‘பாத்துக்கலாம்’…அசால்ட்டா இருந்த சாம்சன்: தெரிஞ்சே தவறு செய்ததால்தான்…மெகா தோல்வி!


Samson: ‘பாத்துக்கலாம்’…அசால்ட்டா இருந்த சாம்சன்: தெரிஞ்சே தவறு செய்ததால்தான்…மெகா தோல்வி!


ஐபிஎல் 15ஆவது சீசன் குவாலிஃபையர் 1 ஆட்டத்தில்குஜராத் டைடன்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ்அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஓபனர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 8 பந்துகளில் 3 ரன்களை மட்டும் அடித்து, நடையைக் கட்டினார். அந்த அளவுக்கு துவக்கத்தில் பந்துகள் தாறுமாறாக ஸ்விங் ஆகின. இதனால் ராஜஸ்தான் அணி அடுத்து நிதானமாக விளையாடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

சாம்சனின் துவக்கம்:

பட்லர் ஒரு பக்கம் நிதானம் காட்ட, மறுபக்கம் சாம்சன் ரிஸ்க் எடுத்து பெரிய ஷாட்களை ஆடி 26 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். அடுத்து பட்லரும் ஸ்பின்னர்களுக்கு எதிராக பொறுமையாக விளையாடிவிட்டு, இறுதியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துகளை தொடர்ந்து பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்.

பட்லர் அபாரம்:

ஸ்பின்னர்களுக்கு ஓவர்கள் இருக்கும்வரை 38 பந்துகளில் 39 ரன்களை மட்டும் அடித்த இவர், இறுதியில் 56 பந்துகளில் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 89 ரன்களை சேர்த்து அசத்தினார். படிக்கல் இறுதியில் தனது பங்கிற்கு 20 பந்துகளில் 28 ரன்களை அடித்தார். இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 188/6 ரன்களை சேர்த்தது.

குஜராத் இன்னிங்ஸ்:

பந்துகளில் அவ்வபோது சரியான வேகத்தில் பேட்டிற்கு வராமல் இருந்ததால், குஜராத் அணியில் அவ்வளவு சீக்கரமாக வெற்றிபெற முடியாது எனக் கருதப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. ராஜஸ்தான் பார்முலா படியே ஒருவர் அடித்து ஆட, மற்றவர் நிதானமாக விளையாட ஆரம்பித்தார்கள். சாஹா 0 (2) முதல் ஓவரில் ஆட்டமிழந்த பிறகு, இதனால் ராஜஸ்தானால் விக்கெட்களை எடுக்க முடியவில்லை.

அழுத்தம் காரணமாக:

பிரசித் கிருஷ்ணாவும் அழுத்தம் காரணமாக சரியான லைனில் பந்துவீச தவறினார். இந்த அழுத்தம் பீல்டிங்கிலும் எதிரொலித்தது. கைக்கு வந்த பந்தையும் கோட்டைவிட்டார். மறுபக்கம் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஒபிட் மிக்கேவும் இதேபோல்தான் சொதப்பினார். இதனால் சீனியர் பௌலர் டிரென்ட் போல்டிற்கு கடைசி ஓவரை வழங்கிவிட்டு மிக்கே, பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு, நிதானமாக விளையாடும் சமயத்தில் மிடில் ஓவர்களில் கோட்டைவை சாம்சன் முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தோல்வி இதனால்தான்:

ஆனால், அழுத்தங்களை அதிகரிக்கச் செய்யும் கடைசி ஓவரைத்தான், ஏற்கனவே அழுத்தத்தில் இருந்த பிரசித் கிருஷ்ணாவுக்கு சாம்சன் வழங்கினார்.. 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் கிருஷ்ணா முதல் மூன்று பந்துகளிலும் மில்லரை சிக்ஸர் அடிக்கவிட்டு, சொதப்பினார். 19ஆவது ஓவரை வீசிய மிக்கே கூட 7 ரன்களைத்தான் விட்டுக்கொடுத்திருந்தார். போல்டிற்கு 14ஆவது ஓவரின்போதே கோட்டா முடிந்துவிட்டது.

டெத் ஓவரை போல்டைதான் வீச வைத்திருக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்த மாபெரும் தவறுதான் ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அடுத்து:

இப்போட்டியில் வெற்றிபெற்றதால் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அடுத்து எலிமினேஷனில் ஆர்சிபி, லக்னோ ஆகிய அணிகளில் வெற்றிபெறும் அணியுடன் ராஜஸ்தான் அணி மோதும். இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

Slow Cooker Buffalo Chicken Chili