ஓவர் நைட்ல ஒபாமா ஆக்கிட்டாங்களே...சர்வதேச அளவில் விமர்சிக்கப்படும் பீஸ்ட்...காரணம் இது தானா?
ஓவர் நைட்ல ஒபாமா ஆக்கிட்டாங்களே...சர்வதேச அளவில் விமர்சிக்கப்படும் பீஸ்ட்...காரணம் இது தானா?
இந்நிலையில் பீஸ்ட் பட க்ளைமாக்சில் விஜய் போர் விமானத்தில் பறக்கும் காட்சிகளை, இந்திய விமானப்படையில் ஓய்வுபெற்ற விமானிகள் சிலர் கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டது. இதனால் கடுப்பான விஜய் ரசிகர்களும் #Beast ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கியதுடன் பாலிவுட் படங்களை கலாய்த்து ட்விட்டரில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால் உள்ளூர் நெட்டிசன்கள், விமானப்படை விமானிகள் மட்டுமல்ல சர்வதேச அளவில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் பீஸ்ட் பட க்ளைமேக்சை கலாய்த்து வருகின்றனர். சினிமாக்களில் இது போல் ஹீரோ ஃபிளைட் ஓட்டுவது போல் காட்டப்படுவது ஒன்றும் புதிதில்லையே. எதற்காக பாகிஸ்தான், ஹாங்காங், மலேசியா என பல நாடுகளைச் சேர்ந்த நெட்டிசன்களும் இதை கலாய்க்கிறார்கள் என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நெட்டிசன்கள் கலாய்ப்பதற்கு காரணம் விஜய் போர் விமானம் ஓட்டியது என்பதை விட படம் முழுக்க விஜய், வடிவேலு சொல்வதை போல், எங்க அம்மா சத்தியமா நான் ரா ஏஜன்ட்டா என்ற ரேஞ்சில் தன்னை ரா ஏஜன்ட் என அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது தானாம். 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட பீஸ்ட் படம், இந்தியில் ரா என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் இந்தி ரசிகர்களுக்கு ஏற்றபடி சில வசனங்களை இந்தி டப்பிங்கில் மாற்றி இருந்தார்களாம். அதனால் தான் அனைவரும் பீஸ்ட் படத்தை கலாய்க்கிறார்கள்.
இப்படி பீஸ்ட் படத்தையும், விஜய்யையும் பலரும் கலாய்த்து வருவதால் இதை வைத்தே நம்மூர் மீம் கிரியேட்டர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர். அதில் ஒரு மீமில், அடேய் நெல்சா...உன்னால ஒன்னே ஒன்று தான்டா மிச்சம். பத்து பைசா செலவு இல்லாம எங்க அண்ணன சர்வதேச லெவலில் கொண்டு போய் சேர்த்து விட்ட என கவுண்டமணி ஸ்டைலில் கலாய்த்து வருகின்றனர்.
Comments
Post a Comment