வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அத்திவரதர் புகழ் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா காரணமாக விழா நடக்கவில்லை.
இந்நிலையில், இந்தாண்டு வைகாசி பிரம்மோற்சவ விழா நேற்று காலை 4.20 மணிமுதல் 5.30 மணிக்குள் கோயில் பட்டாச்சாரியார்கள் மூலம் கருடாழ்வார் பொறித்த சின்னத்தை கொடிமரத்தில் ஏற்றி தொடங்கிவைத்தனர். இதை முன்னிட்டு வரதராஜ பெருமாள், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி வழிநெடுகிலும் தோரணங்கள், மாவிலை கட்டி, பேண்ட் வாத்தியங்கள் முழங்க வரதராஜ பெருமாள், தேவி, பூதேவியுடன் தங்க சப்பரத்தில் வீதி உலா சென்று...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment