செஞ்சி: பட்டா மாற்றம் செய்வதுக்கு ரூ.10,000 லஞ்சம்... நில அளவையாளர் கைது!
செஞ்சி: பட்டா மாற்றம் செய்வதுக்கு ரூ.10,000 லஞ்சம்... நில அளவையாளர் கைது!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சக்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவர், தனக்கு சொந்தமான இரு காலி மனைப் பட்டாக்களை பெயர் மாற்றம் செய்யக்கோரி வருவாய்த்துறையிடம் விண்ணப்பித்து இருந்துள்ளார். இந்நிலையில், பட்டா பெயர் மாற்றம் செய்வது குறித்து அண்மையில் செஞ்சி நில அளவையாளர் அன்புமணியை அணுகியுள்ளார் அவர். அப்போது, நில அளவை செய்து, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார் அதிகாரி அன்புமணி.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜோசப், லஞ்சம் கொடுக்க விரும்பாமல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி தேவநாதனை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரின் வழிகாட்டுதல் படி, நில அளவையாளர் அன்புமணியிடம் அந்த லஞ்ச பணத்தை கொடுப்பதற்காக அவரை தொலைப்பேசியில் அழைத்தாராம் ஜோசப். அப்போது, செஞ்சி பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு ஜோசப்பை வரும்படி அழைத்த அன்புமணி, அவரிடமிருந்து லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அச்சமயம் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அன்புமணி கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் அன்புமணியிடன் தொடர் விசாரணையும் மேற்கொண்டனர்.
பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக, நில அளவையாளர் லஞ்சம் பெற்றதினால் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் செஞ்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment