பாமக எம்எல்ஏ புகழாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினை காமராஜர் போல நினைக்கிறேன்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் மேட்டூர் சதாசிவம் (பாமக) பேசுகையில், ‘மேட்டூர் தொகுதியில், கொளத்தூர் ஒன்றியத்தில் தோனிமடுவு பள்ளத்தில் நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும். அந்த மக்களை காப்பாற்றுவதில் நம்முடைய முதல்வர், பெருந்தலைவர் காமராஜரை போல நினைக்கிறேன். புகழ்ந்து பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள். மன்னிக்கவும். புகழ்ந்து பேசக்கூடாது. காரியம் நடக்க வேண்டும்’ என்றார். எம்எல்ஏவின் பேச்சை கேட்டு முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் சிரித்தனர். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து எம்எல்ஏ சதாசிவம் பேச்சை தொடர்ந்தார்.
Tags:
பாமக எம்எல்ஏ...விரிவாக படிக்க >>
Comments
Post a Comment