சக தீட்சிதரை தாக்கியதாக புகார் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் மீது வழக்குப் பதிவு
சிதம்பரம்:கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை செய்து வருபவர் கிருஷ்ணசாமி தீட்சிதர்(62). இவர் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து கோயிலில் பிரசாதம் பெற்றுள்ளார். அப்போது அவரை சக தீட்சிதரான ரவி செல்வம் தாக்கி காயப்படுத்தி, பூணூலையும் அறுத்ததாக கூறப்படுகிறது.அவர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்படி சிதம்பரம் நகர போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
144 தடை உத்தரவு: சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி பிறப்பித்துள்ள உத்தரவில், நடராஜர் கோயில் வழிபாடு தொடர்பாக அரசின் அரசின் முடிவு வரும் வரையில் எவ்வித போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், ஆலோசனைகளையும் மேற்கொள்ள கூடாது, ஒரு மாத காலத்திற்கு குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment